இனி ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்.. தனக்கு தானே தடை விதித்த பிரித்தானியா ராணி: குவியும் பாராட்டுகள்

Report Print Basu in பிரித்தானியா

விலங்குகளின் ரோமங்களை ஆடைகளில் பயன்படுத்த பகிரங்கமாக தடைசெய்த அரச குடும்பத்தின் முதல் நபராக இரண்டாம் எலிசபெத் ராணி உருவெடுத்துள்ளார் என அவரது ஆடை அலங்காரர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது புதிய புத்தகத்தில் ராணியின் ஆடை ரகசியங்களைப் பற்றி எழுதிய Angela Kelly, ராணி தனது புதிய ஆடைகளில் உண்மையான விலங்குகளின் ரோமங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டார் என கூறியுள்ளார்.

ராணி குறிப்பாக குளிர்ந்த காலநிலையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்தால், 2019 முதல் அவர் வெது வெதுப்பாக இருக்க ஆடைகளில் போலி ரோமங்களே பயன்படுத்தப்படும் என்று அவர் எழுதியுள்ளார்.

ராணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆடைகள் அனைத்தும் போலி ரோமங்கள் கொண்டவை என பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இருக்கும் ஆடைகளில் உள்ள அனைத்து ரோமங்களும் மாற்றப்படும் என்று நாங்கள் பரிந்துரைக்கவில்லை, ராணி மீண்டும் ஒருபோதும் விலங்குகளின் ரோமங்களை கொண்ட ஆடையை அணிய மாட்டார்.

எனினும், ராணி தனது அலமாரிகளில் இருக்கும் பழைய ஆடைகளை மீண்டும் அணிவார் என தெரிவித்துள்ளது.

2015ல் கிறிஸ்துமஸ் தினத்தன்று பழுப்பு நிற விலங்குகள் ரோமங்கள் கொண்ட கோட் அணிந்ததற்காகவும், 2010ல் நரி ரோமங்கள் கொண்ட கோட்டும் அதற்கு பொருந்திய நரி ரோமங்கள் கொண்ட தொப்பியை அணிந்ததற்காகவும் கடந்த காலங்களில், பிரித்தானியா ராணி விலங்கு உரிமை பிரசாரகர்களால் விமர்சிக்கப்பட்டது நினைவுக் கூரதக்கது.

தற்போதைய பிரித்தானியா ராணியின் இந்த நடவடிக்கையை விலங்குகள் நல ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

விலங்குகளின் ரோமங்கள் விற்பனையை தடை செய்ய விரும்பும் விலங்கு உரிமை அமைப்பான பீட்டா, இது மாற்றத்திற்கான அடையாளம் என பாராட்டியுள்ளது.

இருப்பினும், அவர்கள் புதிய கொள்கையை ராணியின் காவலில் உள்ள படையினருக்கு விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர், அவர்களின் தொப்பிகளில் அணிந்திருந்த கரடி ரோமங்களை போலியானவை மூலம் மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்