பிரித்தானியாவின் தலைசிறந்த இலங்கை உணவகத்துக்குள் பாய்ந்த லொறி: வெளியான படங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் தலைசிறந்த இலங்கை ஓட்டல் என்ற பாராட்டைப்பெற்ற உணவகம் ஒன்றின் மீது லொறி ஒன்று மோதியதில் அதின் முன்பகுதி உணவகத்தினுள் நுழைந்ததால், உணவகம் சேதமடைந்துள்ளது.

Ealing என்ற பகுதியிலுள்ள Northfield Avenueவில் அமைந்துள்ளது Papaya என்னும் இலங்கை உணவகம்.

பிரித்தானியாவின் தலைசிறந்த இலங்கை உணவகம் என்ற பெயர் அதற்கு உண்டு. நேற்று மதியம் விபத்து ஒன்றில் லொறி ஒன்று அந்த உணவகத்தில் மோதியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியபோது, வேன் ஒன்று யூ டர்ன் செய்ய முயலும்போது, அருகிலுள்ள தெரு ஒன்றினுள்ளிருந்து இந்த லொறி வந்தது.

Image: @Crazyerol123

இரண்டு வாகனங்களும் பலமாக மோதிக்கொண்டதில், லொறி சென்று உணவகத்தின் மீது மோதியது.

பயங்கர சத்தத்துடன் அது மோதியதில் எனக்கு இதயத்துடிப்பே நின்றுவிட்டதுபோல் உணர்ந்தேன் என்றார்.

தகவலறிந்து பொலிசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உணவகம் மட்டும் லொறி மோதியதில் சேதமடைந்துள்ளது.

Image: @Crazyerol123

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்