பிரித்தானிய மகாராணியாரை சந்தித்தார் போரிஸ் ஜான்சன்: நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பாக பேசுவதற்காக!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மகாராணியாரை சந்தித்து முறைப்படி நாடாளுமன்றம் கலைப்பு உட்பட முக்கிய விடயங்கள் குறித்து பேசி திரும்பியுள்ளார்.

டிசம்பர் மாதம் 12ஆம் திகதி பிரித்தானியாவுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கு முன் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மரபு.

எனவே அது குறித்து மகாராணியாருடன் பேசி, மகாராணியாரின் அனுமதியை பெறுவதற்காக பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மகாராணியாருக்கு அறிவிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி தேர்தல் பிரச்சாரங்களும் தொடங்கும்.

தற்போது மகாராணியாரை போரிஸ் ஜான்சன் சந்தித்து வந்த நிலையில், ஊடகவியலாளர்கள் முன் உரையாற்ற உள்ளார் அவர்.

அதற்காக ஊடகவியலாளர்கள் அவரது வீட்டுக்கு முன் கூடியுள்ளனர்.

போரிஸ் ஜான்சன் பக்கிங்காம் அரண்மனைக்குள் செல்லும் காட்சிகள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அவர் மகாராணியாரை சந்தித்தது தொடர்பான படங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

reuters

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்