இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் கொலை வழக்கு: வீட்டின் பின்னால் ஒரு மாதம் ஒளிந்திருந்த முன்னாள் கணவன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இந்திய வம்சாவளி கர்ப்பிணிப்பெண் ஒருவரை அவரது முன்னாள் கணவர் கொலை செய்த வழக்கில், அவர் ஒரு மாதமாக அந்த பெண்ணின் வீட்டின் பின்னால் மறைந்திருந்து வேவு பார்த்தது தெரியவந்துள்ளதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு லண்டனில் வசிக்கும் Devi Unmathallegadooவை அம்பெய்து கொலை செய்தார் அவரது முன்னாள் கணவரான Ramanodge Unmathallegadoo. அப்போது Devi எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

வில் அம்புடன் வீட்டுக்குள் நுழைந்த Ramanodgeவைக் கண்ட Deviயும் அவரது இந்நாள் கணவரான Imtiaz Muhammadம் ஆளுக்கொரு பக்கம் பயந்து ஓட, படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த Devi மீது அம்பெய்திருக்கிறார் Ramanodge.

Devi மீது பாய்ந்த அம்பு, அவரது உடலைத் துளைத்துக்கொண்டு 14 இஞ்ச் உள்ளே சென்று அவரது இதயத்தை துளைத்திருக்கிறது.

அந்த அதிர்ச்சியில் அவருக்கு மாரடைப்புஏற்பட்டுள்ளது. உடனடியாக பொலிசாரும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட, Devi மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

அவர் அபாய கட்டத்திலிருந்ததைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.

அதிர்ஷ்டவசமாக அம்பு குழந்தையை தாக்கவில்லை, குழந்தை பிழைத்துக்கொண்டது. ஆனால் சிறிது நேரம் கழித்து Devi இறந்துபோனார்.

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த Ramanodgeஇடம் இந்த செய்தி கூறப்பட்டதும் அவர் அதற்கு ரியாக்ட் செய்த விதம், போலியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்கள் விசாரணை அதிகாரிகள்.

தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று பல முக்கிய தகவல்கள் Old Bailey நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டன.

அவற்றில் முக்கியமானது, எப்போது Ramanodge மனைவியை பிரிந்தாரோ, அப்போதிருந்தே, மனைவியின் வீட்டின் பின்னாலுள்ள ஷெட் ஒன்றில் மறைந்திருந்து அவரை வேவு பார்க்கத் தொடங்கியுள்ளார் அவர்.

பின்னர் ஆயுதங்களை வாங்கிய Ramanodge, அந்த வில்லில் அம்பை பொருத்துவதே கடினமான வேலை என்பதால், அதற்கென்று தனியாக ஒரு இயந்திரத்தை வாங்கியிருக்கிறார்.

ஒரு அம்பெய்தால் மறுமுறை அதில் அம்பை பொருத்த வெகு நேரம் ஆகும் என்பதால், இரண்டாவது வில் ஒன்றையும் வாங்கி அந்த ஷெட்டுக்குள்ளேயே தயாராக வைத்திருக்கிறார் அவர்.

Devi மீது அம்பெய்த Ramanodgeவை பொலிசார் பிடித்ததும், தான் Deviயை குறிவைக்கவில்லை, Imtiazஐத்தான் குறிவைத்தேன் என்று கூறியிருக்கிறார் அவர். ஆனால், வீட்டுக்குள் வில் அம்புடன் அவர் நுழைந்ததும், ஆளுக்கு ஒரு பக்கம் Imtiazம் Deviயும் ஓட, படிக்கட்டில் ஏறி ஓடிய Devi மீதுதான் அவர் அம்பெய்துள்ளார்.

ஆக, அவர் Imtiazஐ குறிவைத்ததாக கூறப்படுவது பொய் என்றும், ஒரு மாதம் Devi வீட்டின் பின்னால் ஒளிந்திருந்து அவரைக் கொல்லத்தான் நீண்டகால திட்டமிட்டிருக்கிறார் Ramanodge, என்றும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தன்னை விட்டு விட்டு புதிதாக Imtiazஐ தேர்ந்தெடுத்ததால், பொறாமையில் Deviயையும் அவர் வயிற்றிலிருக்கும் Imtiazஇன் குழந்தையையும் கொன்று பழி தீர்க்கத்தான் Ramanodge இந்த கொடூர செயலை செய்துள்ளார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Ramanodge தொடந்து காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்