சொந்த நாட்டுக்கு என்னை அனுப்பினால் தற்கொலை செய்வேன்! லண்டனில் உள்ள இந்திய கோடீஸ்வரரின் மிரட்டல்

Report Print Raju Raju in பிரித்தானியா

வங்கியில் பல கோடிகள் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி தன்னை இந்தியாவிடம் ஒப்படைத்தால் தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினரான மெஹுல் சோக்ஸி ஆகியோர் 13,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மோசடி அம்பலமான நிலையில் இருவரும் லண்டனுக்கு தப்பினர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நீரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதிலிருந்து அவரது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் மோடி தாக்கல் செய்த மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நான்காவது முறையாக அவரின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

மோடியை வெளியே விட்டால் தன் மீதான குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை அழித்துவிடுவார் என்பதால் ஜாமீன் தர முடியாது என்று நீதிபதி கூறியிருக்கிறார்.

இதோடு வீட்டு காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற அவரின் கோரிக்கையை ஏற்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜாமீன் மனு விசாரணைக்காக மோடி ஆஜர்படுத்தப்பட்ட போது அதனுடன் அளிக்கப்பட்ட கடிதத்தில், சிறையில் மூன்று முறை தான் தாக்கப்பட்டதாகவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மோடி கூறியிருக்கிறார்.

இந்தியாவில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து முறையான விசாரணை நடைபெறாது எனவும் அவர் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

நீரவ் மோடி வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்