8 பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் ஊற்றி மரண பயத்தில் நடுங்க வைத்த இளைஞர்: வெளியான வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் இனைஞர் ஒருவர் 8 பொலிஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிர் பயத்தில் நடுங்க வைத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவத்தன்று எசெக்ஸ் பொலிசார், பாசில்டன் பகுதியில் வைத்து திருட்டு பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், சம்பவயிடத்தில் இருந்தவர்கள் பொலிசாரை தடுத்துள்ளனர்.

அச்சமயத்தில் ஜஸ்டின் ஜாக்சன் என்ற 28 வயதுடைய இளைஞர், பொலிசார் மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார். தங்கள் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்த பொலிஸ் அதிகாரிகள் உயிர் பயத்தில் நடுங்கியதாக விவரித்துள்ளனர்.

யாராவது தீ வைத்து விடுவார்கள், சாம்பாலகிவிடுவோம் என பயந்ததாக பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பின்னர், அருகில் இருந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு உதவி செய்துள்ளனர். இரண்டு பொலிசார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ஜாக்சன், தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரி நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் பதற்றத்தை குறைக்கவே அவ்வாறு செய்தேன்.

நான் செய்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன், பொலிசார்கள் உணர்ந்த பயத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது என கோரியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடூரமான அனுபவத்தை அளித்த ஜாக்சனுக்கு, 3 ஆண்டு 9 மாத சிறை தண்டனை அளித்து எசெக்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்