மாதவிடாய் காலத்தில் இனிநான் பள்ளிக்கு செல்லமாட்டேன்... பிரித்தானிய பள்ளியின் கட்டுப்பாட்டால் நடுங்கும் சிறுமி

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியாவின் தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் 11வயது மாணவி மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கு செல்ல மறுப்பதாக அவளது தாயர் வேதனை தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதவிடாய் ஒரு முக்கியமான காலம். முதல்முறை மாதவிடாய் தொடங்கிய பின் சில காலம் அதை எப்படி சமாளிப்பது என்ற தெளிவு சிறுமிகளுக்கு இருப்பதில்லை. இது குறித்து யூனி செஃப் நடத்திய ஆய்வில் உலக அளவில் 10 முதல் 20 சதவீத குழந்தைகள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் மாதவிடாயை கடக்கு நாப்கின்கள் மற்றும் கழிவறை பயன்பாடு போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் சிறுமிகள் பள்ளியை தவிர்க்க நினைப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் பிரிஸ்டோல் பகுதியை சேர்ந்த ஒரு பள்ளியில், 11வயது மாணவி ஒருவருக்கு அவரது மாதவிடாய் காலத்தில், கழிவறை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பள்ளி முடித்து வீடு திரும்பியபோது அவர் கறைபடிந்த ஆடையுடன் வந்துள்ளார். இது முதல் முறை அல்ல இதுபோன்று ஏற்கனவே நடந்துள்ளதாக சிறுமியின் தாயார் பத்திரிகை ஒன்றிற்கு வேதனையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

தன் பெயரும், சிறுமியின் பெயரும் குறிப்பிட விரும்பாத அந்த தாயார் கடந்த முறை இப்படியான நிகழ்வு நடந்தபோது என்மகன் நீளமான மேல் சட்டையும், ஜீன்ஸிம் அணிந்திருந்தர். எனவே மேல்சட்டையின் உதவியுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்த போது இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்ளவதாக தெரிவித்தனர்.

ஆனால், இரண்டாவது முறைாயக கறைபடிந்த உடையுடன் வீட்டிற்கு வந்து இனி இது போன்ற நாட்களில் பள்ளிக்கு நான் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வகுப்பு நேரத்தில் கழிவறை செல்லக்கூடதென அப்பள்ளியில் விதிமுறை உள்ளதாம். எவ்வளவு அவசரம் என்றாலும் அனுமதி தரப்படாது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையன்றி வேறு என்ன?

என் மகளின் மாதவிடாய் காலம் தொடங்கி சில மாதங்கள்தான் ஆகின்றன. மாதவிடாயின் தொடக்க காலத்திலுள்ள குழந்தைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வைத் தர வேண்டுமே தவிர, அவர்களை பயமுறுத்தக் கூடாது.என்று அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளித் தரப்பில், `இந்நிகழ்வுக்காக வருந்துகிறோம். மீண்டும் இப்படி நடக்காது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி படிக்கும் பள்ளி

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்