பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை.. மக்கள் பரிதவிப்பு: 24 மணிநேரத்தில் நாசம் செய்த பலத்த மழை

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் பல பகுதியில் பலத்த மழை தொடர்ந்து பொழிந்து வருவதால், வானிலை மையம் மஞ்சள் ‘உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

ஒரு மாதம் பொழிய வேண்டிய 100 மிமீ மழை 24 மணிநேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பொழிந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Graves Park-ல் உள்ள நதியில் கரையை தாண்டி புகுந்ததால் Sheffield நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு Meadowhall மாலுக்கு பொருட்கள் வாங்க சென்றவர்களின் பாதுகாப்பு கருதி, அனைவரும் மாலுக்கு உள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக Sheffield நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, Mansfield பகுதியில் பலத்த மழையால் நிலச்சரவு ஏற்பட்டதால் 35 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Sheffield, லீட்ஸ் உட்பட Yorkshire மாகாணத்தின் பிற நகரங்களும் பலத்த மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி பிரித்தானியாவில் 26 வெள்ள எச்சரிக்கைகள் மற்றும் 87 முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சுழல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்