சுறா மீன் வயிற்றுக்குள் கிடைத்த கை இந்த பிரித்தானியருடையதுதான்: வெளியான புகைப்படங்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
405Shares

சுறா மீன் ஒன்றின் வயிற்றிற்குள் ஒரு மனித கை கிடைத்துள்ள நிலையில், அது சுற்றுலா சென்ற பிரித்தானியர் ஒருவருடையது என்பது தெரியவந்துள்ளது.

அந்த நபர், பிரெஞ்சு தீவு ஒன்றிற்கு மனைவியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சென்றிருந்த பிரித்தானியரான Richard Martyn Turner (44) என்பது தெரியவந்துள்ளது.

Martynம் அவரது மனைவி Verityயும், Verityயின் 40ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக பிரெஞ்சு தீவான Réunion தீவுக்கு சென்றுள்ளனர். அப்போது Martyn நீந்துவதற்காக சென்றுள்ளார்.

அவர் நீந்த சென்ற பகுதி, சுற்றுலாப்பயணிகளுக்கு பிடித்த, ஆழமற்ற பதுகாப்பான பகுதி என கூறப்படுகிறது.

ஆனால், அந்த பாதுகாப்பான பகுதிக்கு சற்று தொலைவில் அடிக்கடி சுறாக்கள் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டு, இதற்கு முன் ஐந்து சுறாக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீந்தச் சென்ற தனது கணவர் வீடு திரும்பாததைக் கண்டு கவலையடைந்த Verity பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் பிடிபட்ட ஒரு Tiger Shark என்னும் ஆட்கொல்லி சுறாவின் வயிற்றில் ஒரு கை இருந்துள்ளது.

அந்த கையில், Verity, திருமணத்தின்போது Martynக்கு அணிவித்த மோதிரம் இருப்பதைக் கண்டு அது தனது கணவரின் கைதான் என்று கூறியுள்ளார்.

ஒருவரின் உடல் முழுவதும் கிடைக்காத நிலையில், உடற்கூறு ஆய்வு செய்து அவரது அடையாளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். என்றாலும், அந்த கையை பயன்படுத்தி DNA மற்றும் சில இரத்தப் பரிசோதனைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறந்த நாளைக் கொண்டாடச் சென்ற இடத்தில் தனது கணவனை ஒரு பிரித்தானிய பெண் சுறாவிடம் பறிகொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்