பிரித்தானிய இந்துக்களை குறிவைத்து பரப்பப்படும் வாட்ஸ் ஆப் செய்திகள்: தேர்தலையொட்டி பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரித்தானிய இந்துக்களை குறிவைத்து, லேபர் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு வாட்ஸ் ஆப் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லேபர் கட்சி, இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிரானது என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

அவற்றில் வலது சாரி மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கூட்டத்தார் வெளியிட்டுள்ள வீடியோக்களும் அடங்கும்.

இதனால் பிரித்தானியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் இந்துக்களுக்கும், பல்வேறு மதக் குழுக்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க அவை முயல்கின்றனவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அந்த செய்திகளில் ஒன்றில், ’லேபர் கட்சி பாகிஸ்தான் அரசின் பிரசார பீரங்கியாகி விட்டது.

opinionexpress

அது இந்தியாவுக்கு எதிரானது, இந்துக்களுக்கு எதிரானது, இந்திய பிரதமருக்கு எதிரானது.

ஆகவே, இன்னமும் லேபர் கட்சிக்கு வாக்களிக்கும் இந்தியர்கள் யாராவது இருப்பீர்களானால், மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன், லேபர் கட்சியினர், நமது மூதாதையர்களின் நாட்டுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், இந்தியாவிலுள்ள தங்கள் நண்பர்களுக்கும் அவர்களது கலாச்சார பாரம்பரியத்திற்கும் துரோகம் செய்பவர்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தின் மேல் பகுதியில், இதை எல்லா உண்மையான இந்தியருக்கும் பரப்புங்கள் என்றும், செய்தியின் கீழ், Kapil Dudakia என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன.

Kapil Dudakia என்ற தொழிலதிபரை தொடர்பு கொண்டபோது, அவர்தான் அந்த செய்திகளை எழுதினாரா என்பதை கூற மறுத்துவிட்டார்.

சமீபத்தில், இந்து மனித உரிமை இணையதளத்தில், Dudakia லேபர் கட்சியினரை மோசமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வலது சாரி ஊடகவியலாளர் Katie Hopkins ’இஸ்லாம் என் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறிய தகவலும், வலது சாரியினரான Anne Marie Waters என்பவரது செய்திகளும் பரப்பப்படுகின்றன.

லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Tanmanjeet Singh Dhesi கூறும்போது, எனது சக இந்து மற்றும் சீக்கிய குடிமக்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வாட்ஸ் ஆப்பில் இத்தகைய செய்திகளை பரப்பி, நம்மை பிரிக்க முயற்சிக்கும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானியாவிலுள்ள இந்திய சமுதாயம் முழுவதும் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு வாக்களித்தால் மொத்த தேர்தல் முடிவும் மாறிவிடும் என்கிறார்கள் விமர்சகர்கள்.

watsupamericas.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்