லண்டனில் உள்ள உலகளவில் பிரபலமான உணவகத்துக்குள் பாய்ந்த வாகனம்: வெளியான வீடியோ

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள உலக அளவில் பிரபலமான கே.எப்.சி உணவகத்துக்குள் கார் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லண்டன், Tooting பகுதியில் Mitcham சாலையில் உள்ள கே.எப்.சி உணவகத்திலே இவ்விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

உணவகத்திற்குள் திடீரென கார் ஒன்று அதிகவேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கார் மோதி விபத்துக்குள்ளானதில் கடைக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்திற்கு பின் மேல் பாகமின்றி இருந்த காருக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஐந்து பேரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் ஓட்டுநரை கைது செய்துள்ள பொலிசார், அவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை அடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிசார், தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு சாலையை மீண்டும் திறந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்