பாடல் பாடிக்கொண்டே வைத்தியம் பார்த்த மருத்துவர்... இணையத்தில் வைரலான வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் ஒருவர் பாடல் பாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஸ்காட்லாந்தில் உள்ள ரெய்க்மோர் மருத்துவமனையைச் சேர்ந்த ரியான் கோட்ஸி என்கிற குழந்தைகள் நலமருத்துவர், தன்னுடைய குழந்தைக்கு மருத்துவம் பார்த்தது மறக்க முடியாதது என ஒரு தாய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பச்சிளங்குழந்தையான கிரேஸி ஊசி குத்தும்போது அழகூடாது என்பதற்காக, மருத்துவர் ரியான் நாட் கிங் கோலின் ஹிட் பாடலான, "Unforgettable" பாடலை அழகாக பாடுகிறார்.

அவருடைய குரலில் மயங்கி அந்த குழந்தையும் அழாமல் 30 நிமிடங்கள் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மருத்துவரும் இரத்த மாதிரியை எடுத்து விடுகிறார்.

இதுகுறித்து அவருடைய தாய், பொதுவாகவே இரத்தம் எடுக்கும் போது குழந்தைகள் பயத்தில் அழுவார்கள். என் மகள் கூட, இதற்கு முன் இரத்த பரிசோதனை செய்யும் சமயங்களில் எல்லாம் பயத்தில் அழுது கண்ணீர் விடுவாள்.

ஆனால் இந்த முறை அப்படி அழவில்லை. எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து தன்னை பலரும், மருத்துவ பாடகர் நீங்கள் தானே என கேட்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்