நெஞ்சில் பச்சைக் குத்தி காதலைச் சொன்ன இளைஞர்: நெகிழ்ந்த தோழி என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய இளைஞர் ஒருவர் தமது தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது.

பிரித்தானியா மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gloucester பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் டாட்டூ ஸ்டூடியோவுக்குச் சென்றுள்ளார்.

இங்கு எதற்கு அழைத்து வந்தான்? என்று தோழிக்குப் புரியவில்லை. டாட்டூ குத்தப் போகிறேன் என்று தோழியிடம் சொல்லிவிட்டு டி-சர்ட்டை கழற்றிய அந்த இளைஞர், தமது தோழியிடம் நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியில் காத்திருக்கிறாயா என்றார்.

சரி என்ற தோழி வெளியே சென்றுள்ளார். பிறகு, டாட்டூ குத்துபவரிடம் மெதுவாக தமது எண்ணத்தைச் சொன்னார்.

(SWNS)

நான் காதலை வித்தியாசமா வெளிப்படுத்தப் போகிறேன். ’will you marry me?’ என எழுதிவிட்டு பக்கத்தில், Yes, No என இரண்டு பாக்ஸ் போட வேண்டும் என்றார்.

டாட்டூ குத்துபவரும் இவர் விரும்பியது போலவே செய்தார். பிறகு தனது தோழியை அழைத்த இளைஞர், நெஞ்சை அவரிடம் காண்பித்தார்.

இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த தோழி, ’Yes’ பாக்ஸை தொட்டு, வெட்கத்தில் சரி என சொல்ல, அவர் கண் முன்னே, Yes, பாக்ஸில் ஆட்டின் வடிவத்தை டாட்டூ குத்தினார் இளைஞர்.

பின்னர் அங்கேயே காதலிக்கு மோதிரத்தை அணிவித்து நிச்சயதார்த்தையும் முடித்துவிட்டார்.

காதலை வித்தியாசமாக வெளிப்படுத்திய அந்த இளைஞரும் இளைஞியும் தங்கள் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்