பிரித்தானியாவில் மில்லியன் கணக்கில் லொட்டரி வென்ற தம்பதி... இன்று எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மில்லியன் பவுண்ட் கணக்கில் லொட்டரி வென்ற தம்பதி, தற்போது லொட்டரி வெல்லும் அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை எப்படி சிக்கனமாக பயன்படுத்தி, வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் வசித்து வரும் தம்பதி Lucky Elaine(63)-Derek Thompson(61). இந்த தம்பதிக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு 2.7 மில்லியன் பவுண்ட் பரிசாக விழுந்துள்ளது, தற்போது அதன் மூலம் சில தொழில்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இருக்கும் காலத்தில் மில்லியன் கணக்கில் லொட்டரி பரிசு விழுந்தும், அடுத்த சில வருடங்களில் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இதையடுத்து தற்போது இந்த தம்பதி லொட்டரியில் விழுந்த பணத்தை எப்படி மிச்சப்படுத்துவது என்பது குறித்து கூறியுள்ளனர்.

Elaine கூறுகையில், எனக்கு தற்போது 63 வயதாகிறது. நான் யாருக்கும் தனிப்பட்ட அறிவுரை கூற விரும்பவில்லை, ஆனால் நான் என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன்.

நீங்கள் ஒரு சாதரண வாழ்க்கை வாழுங்கள், லொட்டரி விழுந்துவிட்டது என்று கூறி, மிகவும் பிரம்மாண்டமான கடைகளுக்கு செல்லாதீர்கள், எப்போதும் நீங்கள் எங்கு செல்வீர்களோ அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்லுங்கள்.

லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதால், நீங்கள் வைரம், தங்கநகைகளில் மிதக்கலாம் என்று மக்கள் நினைப்பார்கள், ஆனால் நீங்கள் அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாதீர்கள், லொட்டரி பணத்தை வைத்து சில இடங்களுக்கு சுற்றுலா சென்றோம், முன்னாள் பிரதமர் டோனி பிளேயரை சந்தித்தோம், அதன் பின் அதை வைத்து சில தொழில்களில் முதலீடு செய்திருக்கிறோம்.

முதலில் Hampshire-ல் இருந்து Dorset-க்கு குடிபெயர்ந்தோம், அதன் பின் தற்போது நிரந்தரமாக Newcastle-ல் இருக்கிறோம் என்று கூறி முடித்தார்.

மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி மில்லியன் கணக்கில் லொட்டரி வென்றும், இவர்கள் தாங்கள் வாங்கிய வங்கி கடனை, இரண்டு வருடங்களுக்கு பிறகே அடைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்