குழந்தைக்கு தான் தந்தையில்லை என ஏமாற்ற நண்பரை DNA பரிசோதனைக்கு அனுப்பிய நபர்... அதில் வெளியான உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா
880Shares

இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு தான் தந்தை என்பதை மறைக்கவும், குழந்தைக்கான பராமரிப்பு செலவை ஏற்பதை தவிர்க்கவும் தீயணைப்பு வீரர் ஒருவர் செய்த மோசடி செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் Somerset-ஐ சேர்ந்தவர் சைமன் ஜோர்டன் (33), தீயணைப்பு வீரரான இவர் மீது செவிலியர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதாவது தனக்கு பிறந்த குழந்தைக்கு ஜோர்டன் தான் தந்தை எனவும் அதை அவர் மறுப்பதாகவும் தெரிவித்தார்.

இது மட்டும் மருத்துவ பரிசோதனையில் நிரூபணமானால் ஜோர்டன், குழந்தை பராமரிப்பு செலவுக்கு £16,000 தர வேண்டியிருக்கும் என்ற நிலையில் அதிலிருந்து தப்பிக்க அவர் திட்டம் போட்டார்.

அதன்படி அக்குழந்தைக்கு நான் தந்தையில்லை எனவும் வேண்டுமானால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்பட தயார் எனவும் கூறினார்.

Picture: Cascade

ஆனால் தன்னை போல உருவ ஒற்றுமை கொண்ட தனது நண்பர் ஜேசன் கோல்ஸ் (33)-ஐ தனக்கு பதிலாக டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பினார்.

ஆனால் இதில் வசமாக சிக்கி கொண்டார் ஜேசன். இதையடுத்து ஜோர்டன் மற்றும் ஜேசன் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த வந்த சூழலில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜோர்டன் தனது குழந்தைக்கு £16,000 பராமரிப்பு செலவுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும் மோசடி குற்றத்துக்காக அவருக்கு 12 மாத சிறை தண்டனையும், 18 மாதங்கள் அவர் நன்னடத்தையை கண்காணிக்கவும், 200 மணி நேரம் சம்பளம் இல்லாமல் சமுதாய பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல ஜேசனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ஒரு வருடம் நன்னடத்தையை கண்காணிக்கவும் 200 மணி நேரம் சமுதாய பணியில் ஈடுபடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Picture: Cascade News

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்