சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் ராட்சத மலைப்பாம்பை வளர்க்கும் பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
514Shares

மான்களையும் ஆடுகளையும் விழுங்கக்கூடிய 18 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்றை சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் வளர்த்துவருகிறார் பிரித்தானியர் ஒருவர்.

Gloucestershireஐச் சேர்ந்த Marcus Hobbs (31), மூன்று படுக்கையறைகள் கொண்ட தனது வீட்டில் அந்த மலைப்பாம்பை வளர்த்துவருகிறார்.

எட்டு இஞ்ச் நீளமுடையதாக இருக்கும்போது அதை வீட்டுக்கு கொண்டுவந்தார் Marcus. உள்ளூர் விவசாயிகள் கொண்டு வந்து கொடுக்கும் முயல்கள், கருவில் இறந்த மான்கள், கன்றுக்குட்டிகள், ஆடுகள் மற்றும் பன்றிகளை உண்டு இன்று ராட்சத பாம்பாக மாறிவிட்டது அந்த பாம்பு.

SWNS:South West News Service

நான்கு மற்றும் ஒரு வயதில் இரண்டு சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில், இப்படி ஒரு ராட்சத பாம்பை வளர்க்கிறீர்களே என்று Marcusஇடம் கேட்டால், பிள்ளைகள் இருக்கும்போது இந்த பாம்பை வெளியில் எடுக்கமாட்டேன்.

பிள்ளைகள் வேறு அறையில் இருக்கும்போதோ அல்லது தூங்கச் சென்ற பிறகோதான் பாம்பை கூண்டிலிருந்து எடுப்பேன் என்கிறார் Marcus.

இந்த பாம்பை வளர்ப்பதற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகிறதாம். இந்த பெரிய பாம்புடன் சிறிய பாம்பு ஒன்றையும் வளர்த்துவருகிறார் Marcus.

SWNS:South West News Service

SWNS:South West News Service

SWNS:South West News Servic

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்