பிரித்தானிய தேர்தலில் மூக்கை நுழைக்காதீர்கள்: இந்து தேசிய கட்சிக்கு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய தேர்தலில் தலையிடவேண்டாம் என, இந்து தேசிய கட்சியை பிரித்தானிய இந்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் பிரித்தானிய குழு ஒன்று, பிரித்தானியாவில் வாழும் இந்தியர்களை பிரிக்க முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் பிரித்தானிய இந்தியர்கள் என்ற ஒரு கூட்டமாக வாழும் தங்களை இன, மத சாயம் பூசி தேர்தலுக்காக பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்ற வாரம், இந்தியாவில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் பிரித்தானிய குழு ஒன்று, 48 தொகுதிகளில் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்காக பிரச்சாரம் செய்வதாக தெரிவித்திருந்தது.

அத்துடன், லேபர் கட்சி, இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிரானது என்று கூறி, லேபர் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு வாட்ஸ் ஆப் செய்திகளை பரப்பி, தேர்தலுக்கு முன் பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தை உருவாக்கின.

ஆனால் பிரபல பத்திரிகை ஒன்று, பிரித்தானியாவில் அதிக அளவு குஜராத்தி இந்துக்கள் வாழும் பகுதியாகிய, வட மேற்கு லண்டனிலுள்ள Harrow பகுதி மக்களை பேட்டி கண்டபோது, மக்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலையீட்டை கடுமையாக விமர்சித்தார்கள்.

67 வயதான Suresh Morjaria என்பவர் கூறும்போது, அவர்கள் (பாரதிய ஜனதா கட்சி) இங்குள்ள அரசியலில் தலையிடவேண்டாம், அவர்கள் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், ஆனால் இது வேறு நாடு என்கிறார்.

Morjaria மட்டுமல்ல அங்கிருக்கும் பலரும் அவரது கருத்தையே ஆதரிக்கிறார்கள்.

மக்கள் தாங்களே முடிவு செய்யட்டும், அதற்கிடையில் இவர்கள் மூக்கை நுழைக்கவேண்டாம் என்கிறார்கள் அவர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்