எட்டு முறை ஸ்கேன் செய்த போதும் பெண் குழந்தை... ஆனால் பிறந்தது!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

வடக்கு அயர்லாந்தில் தம்பதி ஒன்று பெண் பிள்ளை பிறக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அந்த தாயார் ஆண் பிள்ளையை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு அயர்லாந்தின் கவுண்டி டவுன் பகுதியை சேர்ந்த இளம் தம்பதி சாரா ஹீனி(28) மற்றும் அவரது கணவர் வில்லியம் கோவன்(29).

இருவரும் தங்களுக்கு அடுத்து பிறக்கவிருப்பது பெண் பிள்ளை என ஸ்கேன் அறிக்கையில் உறுதியான நிலையில், தங்களது பிள்ளையை வரவேற்க பிங்க் வண்ணத்தில் அறையை அலங்கரித்ததுடன்,

பிறக்கவிருக்கும் பெண் பிள்ளைக்காக உடுப்புகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் பலவற்றையும் வாங்கிக் குவித்துள்ளனர்.

சாரா கர்ப்பமாக இருந்த 17-வது வாரம் முதல் இவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து வந்துள்ளனர். மூன்று மருத்துவர்களை இவர்கள் கலந்தாலோசித்துள்ளனர்.

இதில் சாராவின் வயிற்றில் வளரும் பிள்ளை பெண் என்றே அவர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் பிரசவத்திற்கான நேரம் நெருங்கிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் அறிக்கையில், சாராவின் வயிற்றில் ஆண் பிள்ளை என்பது தெரியவந்தது.

ஏற்கெனவே இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் என்பதால், பிறக்கவிருக்கும் பிள்ளையும் பெண் என்பதால், வீட்டுக்கு புதிதாக ஒரு குட்டி சகோதரி வரப்போகிறார் என தமது மகள்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

தற்போது சாராவின் வயிற்றில் இருப்பது ஆண் பிள்ளை என மருத்துவர்கள் கூறியது உண்மையில் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

8 முறை ஸ்கேன் செய்தும் அதில் பெண் பிள்ளை என தெரியவந்த நிலையில் திடீரென்று இது எப்படி மாறியது என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மீண்டும் ஒரு பெண் பிள்ளைக்காக காத்திருந்த தம்பதிகளுக்கு தற்போது ஆண் பிள்ளை பிறந்துள்ளது.

இருப்பினும் 12 வாரம் பிராயம் கொண்ட மாக்ஸ் தங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியை நிறைத்து வருவதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்