இளவரசர் ஹரி-மேகன் தம்பதி முடிவால் வருத்தத்தில் பிரித்தானியா ராணி

Report Print Basu in பிரித்தானியா

எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாட இளவரசர் ஹரி-மேகன் தம்பதி முடிவு செய்துள்ளதால் பிரித்தானியா ராணி வருத்தத்தில் இருப்பதாக அரச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி குழந்தை ஆர்ச்சி ஆகியோர் எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்காவில் கொண்டாட உள்ளதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிசெய்துள்ளது.

மேகனின் தாய் Doria Ragland-வுடன் கொண்டாட இந்த மாத இறுதியில் அவர்கள் கலிபோர்னியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஜோடி, குழந்தை மகன் ஆர்ச்சியுடன், பாரம்பரியமாக நோர்போக்கிலுள்ள உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் பிரித்தானியா ராணியுடன் நடைபெறும் கிறிஸ்மஸை கொண்டாடத்தில் கலந்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

அரச குடும்பத்துடன் கிறிஸ்மஸைக் கழிக்க வேண்டாம் என்ற ஹரியின் முடிவால் ராணி வருத்தத்தில் இருப்பதாக அரச குடும்ப வல்லுநர் இங்க்ரிட் சீவர்ட் கூறியுள்ளார்.

குழந்தை ஆர்ச்சியுடன் தம்பதி அமெரிக்கா செல்வதால் சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா ராணி வயதான நிலையில் இருக்கும் போது ஹரி-மேகன் தம்பதி குடும்பத்தின் பகுதியாக இருக்க விரும்பாதது வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் என இங்க்ரிட் சீவர்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்