நாடு கடத்தப்படுவீர்கள்..! ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா

Report Print Basu in பிரித்தானியா

பிரெக்ஸிட்டிற்குப் பிறகு ஒரு புதிய குடியேற்ற நிலைக்கு விண்ணப்பிக்கத் தவறினால் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே கருணை காட்டப்படும் என்று திட்டங்கள் குறித்து சுருக்கமாகக் கூறப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் அல்லது மன இயலாமை உள்ளவர்கள் அல்லது பெற்றோர்கள் தங்கள் சார்பாக விண்ணப்பிக்கத் தவறிய குழந்தைகள் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என குறுகிய பட்டியலை அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதாக புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி பிரித்தானியா அரசாங்கம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கு அரசாங்கத்திடமிருந்து சில வகையான முன் அனுமதி பெற வேண்டிய தேவை ஏற்படும் என கூறப்படுகிறது.

சட்டப்பூர்வமாக அல்லது சட்டவிரோதமாக பிரித்தானியாவில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பதை நிறுவத் தவறியதாக அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்க புள்ளிவிவரங்களின் படி பிரித்தானியாவில் வசிக்கும் 3.5 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களில் பாதிக்கும் மேலானவர்கள் 2020 டிசம்பர் 31 காலக்கெடுவுக்கு முன்னதாக புதிய குடியேற்ற சட்ட அந்தஸ்தைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்தின் வரைவு குடியேற்ற வழிகாட்டுதல்களைப் படிக்க உள்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதாகக் குடியேற்ற வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

அதில், சரியான நேரத்தில் விண்ணப்பிக்கத் தவறும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. எப்போது தகவல்களை வெளியிடுவோம் என்று அரசாங்கம் கூறவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 12ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது, கன்சர்வேடிவ் அரசாங்கம் தோற்றால், திட்டங்களை மாற்றலாம் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்