இந்தியாவில் பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரித்தானியா இளவரசர்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசரான சார்லஸ் 71வது பிறந்தநாளை இந்தியாவில் மாணவர்களுடன் கொண்டாடியுள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த இளவரசர் சார்லசுக்கு நேற்று விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இரு நாட்டின் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று அவரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, மும்பை தாஜ் ஹொட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி பள்ளி மாணவர்கள் சூழ்ந்து நிற்க இளவரசர் கேட் வெட்டி கொண்டாடினார், அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

<இதற்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்