2 வருடங்களாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருக்கும் மகளின் சடலம்... பாசப்போராட்டம் நடத்தும் தந்தை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கொலை செய்யப்பட்ட தன்னுடைய மகளுக்கு இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்குமாறு பிரித்தானியாவை சேர்ந்த தந்தை இரண்டு வருடமாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

பிரித்தானியாவை சேர்ந்த ஈவ் என்கிற 22 மாத குழந்தை கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம், அசைவில்லாமல் கிடப்பதாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவனைக்கு எடுத்துச்செல்லும் போது, குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வெளியேறி அடுத்த சில நிமிடங்களில் இறந்துள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குழந்தை பலமாக தாக்குதலுக்குள்ளாகி இருப்பதும், மண்டை ஓட்டில் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தையின் மாற்றான் தந்தை அடித்து கொலை செய்திருப்பதும், அதற்கு அவருடைய தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இருவரின் மீதும் குற்றம் உறுதியானதை அடுத்து, குழந்தையின் தாயார் அபிகெய்லிற்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது காதலன் டாம் கர்ட்டிற்கு, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆயுள்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது ஒருபுறமிருக்க தற்போது குழந்தையின் உயிரியல் தந்தை டீன், தன் மகளின் உடலை அடக்கம் செய்வதற்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

ஆனால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவருடைய பெயர் இல்லாத காரணத்தால், விசாரணை அதிகாரி அனுமதி மறுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்