முதியவரை காதலித்து திருமணம் செய்த 31 வயது பெண்! தற்போது எப்படி இருக்கிறார்?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் தன்னை 40 வயது அதிகாமானவரை காதலித்து திருமணம் செய்த இளம் பெண், அவருடன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து கூறியுள்ளார்.

காதலுக்கு கண் கிடையாது, வயது கிடையாது, அது ஒரு வகை உணர்வு எப்போது வேண்டும் என்றாலும் வரும் என்று கூறுவர். அந்த வகையில் இளம் பெண், இளஞன் போன்றோர் தங்களை விட வயதில் மூத்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரித்தானியாவின் Northumberland நகரை சேர்ந்தவர் Victoria. தற்போது 31 வயதாகும் இவர் தன்னை விட 40 வயது அதிகமாக இருக்கும் (71 வயது தற்போது) நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களை அக்கம் பக்கத்தினர் காதல் சரி தான், ஆனால் இவர் உடல் அளவில் மகிழ்ச்சியாக இருப்பார்களா? என்று கேலியாக பேசி வருகின்றனர்.

அது குறித்து விக்டோரியா கூறுகையில், எங்கள் இருவருக்கும் இருக்கும் உறவை மக்கள் எப்படி நினைக்கின்றனர் என்று எனக்கு தெரியும்.

அவர் வயதானவர் தான், ஆனால் அவரைப் போன்று வேறு யாராலும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாது. உண்மையை சொல்ல போனால் அவர் எனக்கு கிடைத்த ஒரு ஸ்பெஷல் என்றே சொல்லுவேன்.

நாங்கள் உடல் அளவிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் எங்கள் வாழ்க்கை அது இன்னும் சிறப்பாக்கியிருக்கிறது என்று கூறினார்.

விக்டோரியா ஒரு பராமரிப்பாளராக வேலை செய்து வருகிறார். லென் செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர். இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கிருக்கும் பப் ஒன்றில் சந்தித்து கொண்டனர்.

அதன் பின் இருவரும் ஒருவருக்கொருவர் போன் நம்பர்களை கொடுத்துக் கொண்டு பேசி வந்துள்ளனர். இவர்களின் இந்த நட்பு இப்படி மூன்று வாரங்கள் சென்றது.

(Image: HotSpot Media)

இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் லென் அவரை தன்னுடைய வீட்டில் தங்கி கொள்ள அனுமதித்துள்ளார். அப்போது லென் தான் சமைத்து கொடுத்துள்ளார்.

அப்போதிருந்தே இருவரும் காதலை உணர்ந்துள்ளனர். இதையடுத்து சில நாட்களில் விக்டோரியா தனக்கு இருக்கும் காதலை கூற, லென்னும் கூறியுள்ளார்.

நான் காதலிக்கும் நபர் ஒரு ஓய்வு பெற்ற நபர், வயது அதிகமான நபர் என்று தெரியும். இருப்பினும் அது எனக்கு தெரியவில்லை. லென் தன்னுடைய 30 வயதில் திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையானவர், அவரும் காதலை கூறினார். இருவரும் உணர்வுகளை பரிமாறிக் கொண்டோம்.

இதையடுத்து 2017-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம், அப்போதே எங்களின் வயது குறித்து பலரும் பல்வேறு விதமாக பேசினார். ஆனால் அதை எல்லாம் உண்மையில்லை என்றளவிற்கு இப்போது வாழ்ந்து வருகிறோம் என்று விக்டோரி கூறி முடிக்க, லென், என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாட்கள், நீங்கள் செய்வது உங்களுக்கு சரி என்று நினைத்தால், உங்கள் வாழ்க்கையை அதை நோக்கி நகர்த்துங்கள்.

எந்த நேரத்தில், எந்த வயதில் திருமணம் செய்து கொண்டோம் என்பதில்லை, நான் ஒவ்வொரு நாளும் அவளுக்கு புதுவிதமான நாளாக கொடுக்க நினைக்கிறேன் என்று கூறி முடித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்