பிரித்தானியாவில், மணிக்கு 1,010 கிலோமீற்றர் ஓடி புதிய உச்சத்தை தொட்ட கார்!

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானியவை சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

உலக வரலாற்றில், நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965கிலோமீற்றர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் என்ற சிறப்பை பிளட்ஹவுண்ட் பெற்றுள்ளது.

தற்போது ஜெட் இஞ்சினை பயன்படுத்தி சாதனையை நிகழ்த்தியுள்ள இந்த காரில், ராக்கெட் இஞ்சினைக் கூட பொருத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, ராக்கெட் இஞ்சினை பொருத்தி அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சோதனையில், தற்போதைய உலக சாதனையாக இருக்கும் மணிக்கு 1,228 கிலோமீட்டர் வேகத்தை இந்த கார் எளிதில் பறித்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்