குழந்தைகளை கொன்று போர்குற்றத்தில் ஈடுபட்டதை மூடிமறைத்த பிரித்தானியா இராணுவம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்குற்றத்தில் ஈடுபட்டதை பிரித்தானிய இராணுவம் மூடி மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள துருப்புக்கள் 'குழந்தைகளை கொலை செய்து, பொதுமக்களை சித்திரவதை செய்தன' என்ற கூற்றுக்கு இடையே பிரித்தானிய அரசாங்கமும் இராணுவமும் போர்க்குற்றங்களை மூடிமறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து SAS மற்றும் Black Watch படையினரிடம் விசாரணை மேற்கொண்ட 11 பிரித்தானிய துப்பறியும் அதிகாரிகள், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததாகக் கூறியுள்ளனர்.

விசாரணையில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு இளைஞன் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும், ஈராக் தடுப்பு முகாமில் கைதிகளை 'பரவலாக' சித்ரவதை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

பிபிசி பனோரமா மற்றும் சண்டே டைம்ஸ் ஆகியவற்றின் விசாரணைக்கு பின்னர், பாதுகாப்பு அமைச்சகம் மறுத்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஈராக்கில் பிரித்தானிய படையினர் செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஈராக் வரலாற்று குற்றச்சாட்டுக் குழு (ஐஹாட்) மற்றும் ஆப்கானிஸ்தானில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த ஆபரேஷன் நார்த்மூர் ஆகியவை இந்த விசாரணையில் இருந்து புதிய ஆதாரங்களைப் பெற்றுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்