ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவிற்கு பிடித்தமான உடை!

Report Print Abisha in பிரித்தானியா
157Shares

இளவரசி டயானாவிற்கு பிடித்தமான நீல வெல்வெட் ஆடை ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்தவர் இளவரசி டயானா. அவர், 1985ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து இந்த ஸ்மெஷல் கவுனை உடுத்தி நடனமாடினார்.

இந்த நடனமும், உடையும் உலகம் முழுவது பிரபலமானது. டயானாவின் மனத்திற்கு நெருக்கமான இந்த கவுனை முதலில் 1986ஆம் ஆண்டு ஆஸ்திரியா பயணத்தின்போது அணிந்தார். பிறகு 1991ஆம் ஆண்டில் ராயல் ஒபேரா மாளிகைக்குச் சென்றபோது அணிந்தார். 1997ஆம் ஆண்டு சொந்த உருவப்படம் வரைவதற்காக டயானா தேர்ந்தெடுத்த உடையும் இதுதான்.

இப்படி நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தேர்ந்தெடுத்த இந்த உடையை அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் நிதி திரட்டுவதற்காக அவரே ஏலத்திற்கு கொடுத்திருந்தார்.

அப்போது ஃப்ளோரிடாவை சேர்ந்த தொழிலதிபரான மவ்ரின் டங்கெல் இந்தக் கவுனை 92,72,900 ரூபாய்க்கு பெற்றார். அதை மவ்ரின், 2011-ம் ஆண்டுவரை வைத்திருந்தார். பிறகு, 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் 2,22,57,149 ரூபாய்க்கு வாங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் கெர்ரி டெய்லர் ஏலத்திற்காக, நீல வண்ண உடை தயாராக உள்ளது. டிசம்பர் 9-ம் திகதி நடைபெற உள்ள இந்த ஏலத்தின் ஆரம்ப விலை 3,24,28,732 ரூபாய்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்