அழகிகள் பலரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மேகன்..! எதில் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா
517Shares

செல்வாக்கான ஆடைகளை அணிபவர்கள் பட்டியலில் அழகிகள் பலரையும் பின்னுக்கு தள்ளி பிரித்தானிய இளவரசி மேகன் முதலிடம் பிடித்துள்ளார்.

நவம்பர் 2017ம் ஆண்டு பிரித்தானிய இளவரசர் ஹரியுடனான திருமண நிச்சயதார்த்தத்தை வெளியிட்ட ஒரே இரவில் மேகன் அழகு பாவையாக உருவெடுத்தார்.

அன்றிலிருந்தே அவர் அணியும் ஒவ்வொரு ஆடையும் மக்களால் உற்றுக்கவனிக்கப்பட்டு வருகின்றன. இணையத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் அவருடைய ஆடைகளை அதிகமானோர் விரும்பி பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'லிஸ்ட் இன்டெக்ஸ்' நிறுவனம் செல்வாக்கு மிகுந்த ஆடைகளை அணிபவர்களின் 2019ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு, கைலி ஜென்னர் மற்றும் கிம் கர்தாஷியன் ஆகியோருக்கு பின்னால் மூன்றாவது இடத்தில் இருந்த பிரித்தானிய இளவரசி மேகன், இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல முதல் பத்து இடங்களில் இடம்பிடித்த அரச குடும்ப உறுப்பினர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

2017ம் ஆண்டு 5வது இடம்பிடித்திருந்த கேட் மிடில்டன், இந்த முறை 11வது இடம் பிடித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்