ஈஸ்டர் ஞாயிறு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போது உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம் என பிரித்தானிய விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலை நாடுகளைப் பொருத்தவரையில், தங்கள் சட்ட எல்லையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படும் நிலையில், அப்பகுதி coroner என்னும் விசாரணை அதிகாரி, அந்த மரணம் குறித்து விசாரித்து முடிவைத் தெரிவிக்கவேண்டும்.
அவ்வகையில் தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், இலங்கையில் உயிரிழந்த ஆறு பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம் (unlawfully killed), என குறிப்பிட்டுள்ளார் எசெக்சின் மூத்த coronerஆன Caroline Beasley-Murray.
இலங்கையில் ஆறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளின்போது 266 பேர் வரை உயிரிழந்ததோடு சுமார் 500 பேர் காயமடைந்தார்கள் என்று கூறியுள்ள அவர், உயிரிழந்தவர்களில் துரதிர்ஷ்டவசமாக ஆறு பேரின் விசாரணை முடிவுகளை நாம் இன்று கேட்க இருக்கிறோம் என்றார்.

உயிரிழந்த பிரித்தானியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்த அவர், தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணை ஒன்று தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Anita Nicholson (42), அவரது பிள்ளைகள் Alexander (14), Annabel(15) ஆகியோர் ஷாங்க்ரி லா ஹொட்டல் தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியர்கள்.

தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் Lorraine Campbell (55), ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் William Harrop, மருத்துவரான அவரது மனைவி Sally Bradley ஆகியோர் சின்னமன் கிராண்ட் ஹொட்டல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்.
இதுபோக, மேலும் இரண்டு பிரித்தானியர்களான Daniel Linsey (19) மற்றும் அவரது தங்கை Amelie (15) ஆகியோர் மரணம் குறித்த விசாரணை முடிவுகள் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
