பிரித்தானியாவில் ஆயுதங்களுடன் சினிமா வளாகத்திற்குள் நுழைந்து மர்ம கும்பால் பயங்கர வன்முறை: பொலிசார் மீது தாக்குதல்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் சினிமா வளாகத்திற்குள் பெரிய கத்திகளுடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குழுவாக நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்மிங்காமில் உள்ள ஸ்டார் சிட்டி பொழுதுபோக்கு வளாகத்திலே இந்த பயங்கரமான வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸ் செய்திதொடர்பாளர் அளித்த தகவலின் படி, பர்மிங்காமில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்டார் சிட்டி பொழுபோக்கு வளாகத்திற்குள் பெரிய கத்திகளுடன் ஒரு குழுவினர் நுழைந்ததாக எங்களுக்கு மாலை 5:35 மணிக்கு தகவல் கிடைத்தது.

100க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் விரைந்தனர். மேலும், அந்த பகுதயில் இருந்த மக்களை வெளியேற்ற முயன்ற போது பொலிசாருக்கும் அக்குழுவுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

இதில், பல பொலிசார்கள் தாக்கப்பட்டனர் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சினிமா காண வந்தவர்கள் உட்பட அனைவரும் அப்பகுதியிலிருந்து வெளியேறும் படி பொலிசார் உத்தவிட்டனர்.

அங்கிருந்து சொல்ல மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவயிடத்தில் தொடர்ந்து பொலிசார் கண்காணித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக அவ்வழியாக இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வளாகத்தில் ‘ப்ளு ஸ்டோரி’ என்ற கேங் வார் படத்தின் திரையிடலுக்கு முன்போ அல்லது படத்தின் போதோ வன்முறை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வன்முறையால் சினிமா பார்க்க குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்த பலர் வெளியேற்றப்பட்டு வளாகம் மூடப்பட்டது மற்றும் கும்பல்களிடையே பெரும் சச்சரவு ஏற்பட்ட பின்னர் ஆயுதமேந்திய பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்