லண்டன் விமானநிலையத்தில் இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞன்! கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருக்கும் விமானநிலையத்தில் இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இருக்கும் ஹாத்ரோ விமானநிலையத்தில் இருக்கும் டெர்மினல் 5 Phil Reynolds என்பவருக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் குறித்த விமானநிலையத்தில் Bethan என்ற பெண்ணுக்காக டெர்மினல் 5-வில சில முறை காத்திருந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பு Phil Reynolds இங்கிருந்து தான் Bethan-ஐ சீனாவிற்கு வழியனுப்பியுள்ளார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஷ் நிறுவனத்தின் பயணியான இவர், Phil Reynolds-யிடம் தன்னுடைய காதலை கூற முடிவு செய்துள்ளார். ஆனால் அதை வித்தியாசமாகவும், மறக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தன் வாழ்வில் மிக முக்கியமாக பார்க்கப்படும் விமானநிலையத்தின் டெர்மினல் 5-ல் தன்னுடைய காதலை தெரிவிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கு பிரிட்டிஷ் ஏர்வேஷ் நிறுவனம் உதவியுள்ளது. அதன் படி அந்த விமான நிலையத்தில் இருக்கும் விளம்பர பலகை ஒன்றில் Phil Reynolds-னின் புகைப்படத்திற்க்கு பக்கத்தில் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று இருந்தது.

இதைக் கண்டவுடன் Bethan அப்படியே ஒரு சிரிப்பு சிரிக்க, உடனே Phil Reynolds தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டார். அதற்கு அவர் புன்னகையில் பதில் அளித்தார். Bethan இத்தாலியின் மிலனுக்கு செல்வதற்காக விமானநிலையத்திற்கு வந்த போது இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து Phil Reynolds கூறுகையில், நான் அவளிடம் காதலை கூறும் போது அது மறக்க முடியாத இடமாக இருக்க வேண்டும், எப்போதும் நினைவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் இங்கிருக்கும் டெர்மினல் 5-ல் அவளுக்காக பல முறை காத்திருக்கிறேன், அவளை வரவேற்றிருக்கிறேன், இதனால் இதை விட சிறந்த இடம் எதுவும் இருக்காது என்று தோன்றியது என்று கூறினார்.

ஹாத்ரோ விமானநிலையத்தில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டெர்மினல் 5 இவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதனால் நம்மால் என்ன முடியுமோ அதை செய்தோம், அவர்கள் வருங்காலத்தில் கணவன் மனைவியாக வரட்டும் என்று கூறி முடித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்