அந்த ஒரே காரணத்தால் பேய் என்றார்கள்: இளம் பிரித்தானிய தாயாரின் உருக வைக்கும் பதிவு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த பெண்மணி ஒருவர் தாம் எதிர்கொண்ட ஏளனம் குறித்தும் தமது வாழ்க்கையை மாற்றிய காதல் குறித்தும் முதன் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் குடியிருப்பவர் இரண்டு பிள்ளைகளின் தாயாரான அனா ரோமன்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென்று சுருண்டு விழுந்த அனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர்.

இது அவரது நோய் எதிர்ப்பு சக்தியை சிதைத்ததுடன், இன்னொரு அரிதான நோய்க்கும் வழிவகுத்தது.

அதனால் அனாவின் மூக்கு விரூபமானது. இந்த ஒரே காரணத்தால் நாளடைவில் அனா கொடூரமாக சொற்களை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பேய் என்று கூறியவர்களைவிட ராசியில்லாத முகம் என ஏளனம் செய்தவர்களே அதிகம் என அனா நினைவு கூர்ந்துள்ளார்.

வாழ்க்கையை வெறுத்துப் போயிருந்த அனா, மருத்துவர்களை நாடியதுடன், ஆறு மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

(Image: Alin Turcanu Photography/Mercury)

இதனால் அவரது முகம் மீண்டும் அகோரமானது. இந்த நிலையிலேயே அனா தமது தற்போதைய கணவரை சந்தித்திருக்கிறார்.

இருவரும் ஒத்த கருத்துடையவர்கள் என தெரியவந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

புற்றுநோய்க்கான சிகிச்சையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அனாவால் மீண்டும் பிள்ளை பெற்றுக்கொள்வது கடினம் என மருத்துவர்களால் கூறப்பட்ட நிலையில் அனா தற்போது கருவுற்றிருக்கிறார்.

(Image: Mercury Press & Media)

ஆனால் அவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய சிகிச்சைக்காக அவர் தமது பிறந்த நாடான ருமேனியாவுக்கு திரும்பியுள்ளார்.

மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பும் மன நிலையில் தாம் இல்லை எனவும் அனா வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

(Image: Mercury Press & Media)
(Image: Mercury Press & Media)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்