இளவரசரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த ராணி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டாட்டத்தை ராணி ரத்து செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மறைந்த அமெரிக்க கோடீஸ்வரரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடனான நட்பால், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

அவர் மீது இளம்பெண்கள் பலரும் பாலியல் குற்றசாட்டுக்களை சுமத்தி வந்த நிலையில், தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த இளவரசர் ஆண்ட்ரூ, சமீபத்தில் இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டிகொடுத்தார்.

ராணியின் அனுமதியில்லாமல் இளவரசர் பேட்டி கொடுத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது மூத்த மகனின் உத்தரவின் பேரில் ராணி இளவரசரை அரச கடமைகளில் நீக்கினார்.

இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 60 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு விருந்து வழங்கும் திட்டத்தை ராணி கைவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக, இளவரசருக்கு ஒரு சிறிய குடும்ப விருந்தை ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்