லண்டன் மக்களை பீதியில் அலற வைத்த சம்பவம்: பொதுமக்களால் முறியடிக்கப்பட்ட பெரும் அசம்பாவிதம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பொது மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயங்களுடன் உயிர் தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதலை முன்னெடுத்ததாக கருதப்படும் நபரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.

சம்பவப்பகுதியில் பத்துமுறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, குறித்த தாக்குதல்தாரியை ஆபத்தை பொருட்படுத்தாமல் பொதுமக்களே சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பின்னரே பொலிசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு மடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிரதமரும் உள்விவகாரத்துறை செயலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது லண்டன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்