பிரியங்காவுக்கு நடந்த கொடூரம்.. இந்தியாவுக்கு வர பயம்.. இலங்கைக்கு செல்வார்கள்! பிரிட்டன் இளம்பெண் காட்டம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்த்தால் இந்தியாவுக்கு வரவே பயமாக உள்ளது என ஸ்காட்லாந்து பெண் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் #RIPpriyankareddy #Justicefor priyankareddy போன்ற ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் உலகம் முழுவதும் டிரண்டானது.

இதன் காரணமாக பல்வேறு நாட்டு மக்களும் பிரியங்கா ரெட்டி குறித்த செய்தியை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆசிய கலாச்சாரத்தின் மீது ஈடுபாடு கொண்ட ஸ்காட்லாந்தை சேர்ந்த இளம்பெண் பிரியங்கா ரெட்டி கொலை தொடர்பில் டுவிட்டரில் கோபமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவுகளில், பிரியங்கா ரெட்டிக்கு நடந்த கொடூரத்தை பார்க்கும் போது இந்தியாவுக்கு வர பயமாக உள்ளது.

ஏனெனில் மீண்டும் உயிரோடு சொந்த நாட்டுக்கு நான் திரும்பாமலும் போகலாம்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும்.

அதே சமயம் நான் இந்தியாவை மொத்தமாக இப்படி எடை போடவில்லை, ஆனால் பெண்கள் பாதுகாப்பு விடயத்தில் பிரச்னை உள்ளது.

நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு என்ன ஆனது?

இந்தியா எப்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் தன் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்கிறது, ஆனால் மக்களுக்கு என்ன தான் பிரச்னை?.

இது போன்ற சம்பவங்களால் இந்தியாவுக்கு வரவிரும்பும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை அல்லது மாலத்தீவுக்கு செல்வார்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்