லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: பிரித்தானிய பொதுத்தேர்தல் பிரசாரத்தை தள்ளி வைத்த கட்சிகள்!

Report Print Abisha in பிரித்தானியா

நேற்று நடைபெற்ற லண்டன் பிரிட்ஜ் தாக்குதலை தொடர்ந்து அரசியல் கட்சிகள், தேர்தல் பிராசாரத்தை தள்ளி வைத்துள்ளனர்.

அடுத்த மாதம் 12ஆம் திகதி, பிரித்தானிய பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலையில் லண்டன் பிரிட்ஜ் பகுதியில் தீவிரவாதி ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், இரண்டுபேர் கொல்லப்பட்டனர். மேலும் 3பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியவை தேர்தல் பிரசாரத்தை நிறுத்தியுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும், தொழிலாளர் கட்சி தலைவர் Jeremy Corbyn ஆகியோர். இந்த விவகாரம் நாட்டு மக்களை பாதிக்ககூடாது என்று தேர்தல் பிரசாரத்தை நிறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் லண்டனில் இன்று பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார், ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

Yorkshire-ல் நடக்க இருந்த NHS உச்சி மாநாட்டை தொழிலாளர் கட்சி நிறுத்தியுள்ளது. லிபரல் கட்சி பிரெக்சிட் எதிர்ப்பு பேரணியை இனி அப்பகுதியில் முன்னெடுக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்