குழந்தை பெற்றதால் அழகி பட்டம் வென்ற சர்வதேச மொடலுக்கு வந்த பிரச்னை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஒரு குழந்தைக்கு தாய் என்பதால் உலக அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து, உக்ரைன் அழகி ஒருவர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.

வெரோனிகா டிடுசென்கோ (24) என்பவர் கடந்த 2918ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்றார். ஆனால் அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் விவாகரத்து செய்யப்பட்டு, 5 வயதில் அலெக்ஸ் என்ற மகனைப் பெற்றிருந்தார் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

உலக அழகிப்போட்டி நடைபெற இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். போட்டி அமைப்பாளர்கள் சமத்துவச் சட்டம் 2010 ஐ மீறுவதாகக் கூறி, நவீன உலகத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களது ‘காலாவதியான’ நுழைவு விதிகளை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைப்பாளர்கள் பாகுபாடு காட்டுவதாகவும், அவரை ‘பகிரங்கமாக அவமானப்படுத்தியதாகவும்’ டிடுசென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

1951 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் எரிக் மோர்லே உருவாக்கிய "Miss World" மிகப்பெரிய அழகுப் போட்டியாகும்.

இதில் கலந்துகொள்ளும் 118 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்களில், தாய்மார்கள் அல்லது திருமணமான பெண்களை இருந்தால் எப்போதுமே தடை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக உக்ரைன் தலைவர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டதாலே விதிகளை மீறி கலந்துகொண்டதாக வெரோனிகா தனது தவறை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்