லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் ஹீரோவாக மாறிய நபர் ஒரு கொலை குற்றவாளி: அதிர்ச்சி தகவல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பயங்கரவாதியை மடக்கி பிடித்து ஹீரோவாக மாறிய நபர் இதற்கு முன் கொலை குற்றத்தில் சிறைத்தண்டனை அனுபவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் நேற்று நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய 28 வயதான பயங்கரவாதி உஸ்மான் கானை துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர்.

இதற்கிடையில் அங்கிருந்த பொதுமக்கள் சிலர் துணிந்து செயல்பட்டு, குற்றவாளியை மடக்கி பிடித்து தரையில் சாய்த்தனர். அவர்கள் அனைவரையும் பிரித்தானியாக மக்கள் ஹீரோவாக கொண்டாடி வரும் நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது ஹீரோவாக செயல்பட்ட 42 வயதான ஜேம்ஸ் ஃபோர்டு, படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் இவர் ஏற்கனவே ஒரு கொலை குற்றத்தில் சிறைத்தண்டனை அனுபவித்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

கற்றல் குறைபாடு கொண்ட அமண்டா என்கிற 15 வயது சிறுமியை, 2004ம் ஆண்டு ஜேம்ஸ் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் என அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தங்களுடைய குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமலே ஜேம்ஸ் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்