லண்டன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு!

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் பாலம் மீது உஸ்மான் கான் என்பவரால் முன்னெடுக்கப்பட்ட கத்திக் குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பானது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

குறித்த தகவலை அதன் உத்தியோகப்பூர்வ செய்தி முகமை மூலமாக வெளியிட்டுள்ளது. வெள்லியன்று நடத்தப்பட்ட தாக்குதலானது தங்கள் அமைப்பில் ஒருவரே முன்னெடுத்ததாக அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்களை பிரித்தானியா உள்ளிட்ட நேச நாடுகள் குறிவைப்பதற்கு பதிலடி தரும் வகையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லண்டன் தாக்குதலை முன்னெடுத்த உஸ்மான் கான் பொலிசாரால் சம்பவயிடத்தில் வைத்தே சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இச்சம்பவத்தில் அடையாளம் தெரியாத பெண் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

சம்பவத்தின்போது தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களில் சிலர் உஸ்மான் கானை குண்டுகட்டாக சூழ்ந்து பிடித்துள்ளனர்.

அதன் பின்னரே பொலிசாரின் துப்பாக்கி குண்டுக்கு உஸ்மான் கான் பலியானார். 2010 ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டிருந்த உஸ்மான் கான் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே விடுதலையாகியுள்ளார்.

தமது செயற்பாடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருவது தெரிந்தும், 28 வயதான உஸ்மான் கான் மீண்டும் தீவிரவாத தாக்குதல் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்