லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் குத்தி கொல்லப்பட்ட இளைஞர் குறித்து வெளியான நெகிழ வைக்கும் தகவல்

Report Print Basu in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் குத்திக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் 25 வயதான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி ஜாக் மெரிட் என தெரியவந்துள்ளது.

கைதிகள் மறுவாழ்வு தொடர்பான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாநாட்டில் 28 வயதான உஸ்மான் கான் தாக்குதலைத் தொடங்கியபோது கொல்லப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.

ஜாக் மெரிட் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 2016ல் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தார், அங்கு குற்றவியல் துறையில் இயங்கும் கைதகளுக்கான ‘ஒன்றாக கற்றல்’ திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த ஜாக் மெரிட், லண்டன் பிரிட்ஜின் வடக்கு முனையில் உள்ள ஃபிஷ்மொங்கர்ஸ் ஹாலில் நடந்த கைதிகளின் மறுவாழ்வு திட்டமான ‘ஒன்றாக கற்றல்’ மாநட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.

சிறையில் இருந்தபோது கான் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளர் மற்றும் நிகழ்வில் மாணவர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட பொதுமக்களில் ஒருவராக கலந்துக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த போது திடீரென தாக்குதலில் ஈடுபட்ட கான் அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கியுள்ளார்.

twitter

பயங்கரவாத சதி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட கான், 2018 டிசம்பர் மாதம் விடுதலையாகியுள்ளார். லண்டன் பிரிட்ஜில் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட கானை பொதுமக்கள் தடுத்த பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாக்குதலில் இறந்த ஒரு பெண்ணின் பெயர் இன்னும் குறிப்பிடப்படவில்லை. மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

டேவிட் மெரிட் ட்விட்டரில் தனது மகன் ஜாக் ஒரு "அழகான ஆன்மா" என்று எப்போதும் பின்தங்கியவர்களின் பிரச்னைகளை எடுத்துக் கொண்டார் என்று கூறினார்.

ஜாக் தானுடன் பணிபுரிந்த அனைவரிடமும் மிகவும் அன்பாக பழகி பேசுவார், அவர் தனது வேலையை நேசித்தார் என்று கூறினார்.

மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட எனது மகன் ஜாக், அவரது மரணம் இன்னும் கடுமையான தண்டனைகளுக்கு சாக்குப்போக்காகவோ அல்லது மக்களை தேவையின்றி தடுத்து வைப்பதற்காகவோ பயன்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் ஜாக் மெரிட்டின் தந்தை, இப்போது குறித்த பதிவை நீக்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்