லண்டனில் அதிகாலையில் நடந்தது என்ன? குலுங்கிய வீடுகள்! அதிர்ச்சியில் மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் அதிகாலையில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால், அங்கிருக்கும் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல், பொலிசாருக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டிருப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் அதிகாலையில் உள்ளூர் நேரப்படி சரியாக 4.17 மணி முதல் 4.20 மணிக்குள் பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டதால், வீடுகள் குலுங்கியதால், சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த பயங்கர வெடிச்சத்ததின் காரணமாக அதிர்ச்சியில் கண்விழித்துள்ளனர்.

இது குறித்து Natasha என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கிறேன், நான் விழித்த சில நிமிடங்களில் பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டது, நீங்கள் யாரும் கேட்டீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து Herts Fire Control தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தற்போது வரை ஏராளமான போன் கால்கள் குறிப்பாக Hertfordshire-ல் தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று லண்டனில் இருக்கும் ஏராளமானோர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில், பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டது, இதனால் வீடுகள் எல்லாம் குலுங்கியது என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அதிர்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்