லண்டனில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்மான், முன்னாள் குற்றவாளி நிகழ்வில் நல்லவர் போல கலந்துகொண்ட பின்னரே தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியா தலைநகர் லண்டனில் நேற்றைக்கு முன்தினம் நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு, மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலின் போது பயங்கரவாதி உஸ்மான் கான் (28) பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். பயங்கரவாத குற்றங்களின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு சிறையில் அடைப்பட்ட உஸ்மான், 20 கடுமையான நிபந்தனைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்கிற அடிப்படையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டான்.
அந்த நிபந்தனைகளில், உஸ்மான் எப்போதும் ஒரு குறிச்சொல்லை அணிந்திருக்க வேண்டும். அவர் எங்கு சென்றாலும் கண்காணிக்கப்பட வேண்டும் மற்றும் முற்போக்கான நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பன அடங்கும்.
இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் முன்னாள் குற்றவாளிக்கு என வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதற்காக உஸ்மான் சிறப்பு அனுமதி பெற்று கலந்து கொண்டான்.
காலை முழுவதும் நிகழ்ச்சியில் இருந்த உஸ்மான் மதிய உணவுக்கு பின்னரே தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளான்.
இதில் முதல் ஆளாக முன்னாள் குற்றவாளிகளுக்கு பாடம் எடுத்த, 25 வயதான ஜாக் மெரிட் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.