லொட்டரியில் பல கோடிகள் பரிசை தட்டி சென்ற நபர்! டிக்கெட்டை சோதனை செய்த போது தெரிந்த உண்மை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பல கோடிகள் பரிசு லொட்டரியில் விழுந்ததாக மோசடி செய்த நபர் தனது விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளார்.

Hertfordshire-ஐ சேர்ந்தவர் எட்வார்ட் புட்மேன் (54). இவர் கடந்த 1991ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு Camelot லொட்டரியில் வேலை செய்த ஜில்ஸ் நிப்ஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த லொட்டரியில் வேறு யாருக்கோ விழுந்த £2.5 மில்லியன் பம்பர் பரிசை போலியான சீட்டு மற்றும் ஆவணங்கள் மூலம் தனக்கு விழுந்ததாக கூறி பரிசை எட்வார்ட் பெற்றார். இதற்கு ஜில்ஸ் உதவினார்.

இந்நிலையில் பரிசு பணத்தில் ஜில்ஸுக்கு பாதி தருவதாக கூறியிருந்த எட்வார்ட் அவரை ஏமாற்றி சிறிதளவு பணம் மட்டுமே கொடுத்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வந்த நிலையில் ஜில்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் இறப்பதற்கு முன்னர் லொட்டரியில் செய்த மோசடியை அவர் அம்பலப்படுத்தினார். இதையடுத்து குறித்த லொட்டரி சீட்டை சோதனை செய்த போது அது போலியனது என தெரியவந்ததையடுத்து மோசடி வழக்கில் பொலிசார் எட்வார்டை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் வருடக்கணக்கில் நடந்து வந்த நிலையில் கடந்த அக்டோபரில் எட்வார்டுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எட்வார்ட் முடிவு செய்துள்ளார்.

அதே சமயம் உண்மையாகவே பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் Worcester நகரில் வாங்கப்பட்டது தெரிந்தாலும் அதை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்