லண்டன் பிரிட்ஜ் தீவிரவாத தாக்குதல் நடந்த அதே தெருவில் ‘ஆசிட்’ தாக்குதல்

Report Print Basu in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜ் தீவிரவாத தாக்குதல் நடந்த அதே தெருவில் இளைஞர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரோ ஹை தெருவிலே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் பொலிஸிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்திற்கு லண்டன் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணையப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. எனினும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சாதனம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பிரிட்ஜ் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிட் தாக்குதலை அடுத்து பொலிசார் அப்பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்தனர். தற்போது, தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்