லண்டன் பிரிட்ஜ் சம்பவம்: நினைவேந்தலில் பங்கேற்கும் எதிரெதிர் கட்சித் தலைவர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜ் சம்பவத்தையொட்டி தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று உயிரிழந்த இருவருக்காக நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எதிரெதிர் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

லண்டன் பிரிட்ஜில் தீவிரவாதியின் தாக்குதலில் பலியான Jack Merritt (25) மற்றும் Saskia Jones (23) ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி, இன்று Guildhall Yard என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் பரபரப்பு அடைந்திருந்த தேர்தல் பிரச்சாரங்கள் இந்த அசம்பாவிதத்தையொட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவரான போரிஸ் ஜான்சனும் எதிர்க்கட்சியாக இருந்த லேபர் கட்சியின் தலைவரான ஜெரமி கார்பினும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

MET POLICE

Jack Merritt மற்றும் Saskia Jones இருவரும் தீவிரவாதியான உஸ்மான் கானால் குத்திக் கொல்லப்பட்டார்கள்.

உஸ்மான் கான் ஏற்கனவே 2012ஆம் ஆண்டு, தீவிரவாத குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டான்.

அதன் பின்பே இந்த கோர தாக்குதலை மேற்கொண்டான் அவன். எனவே இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலிருந்து விடுவிப்பது தொடர்பாக அவசர மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பொதுமக்களும் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், இரங்கல் புத்தகம் ஒன்று Guildhall கலையரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

METROPOLITAN POLICE

பொதுமக்கள் வந்து Mansion Houseக்கு அருகில் உள்ள அந்த கலையரங்கத்தின் முன் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் விதமாக மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தலாம்.

Merritt மற்றும் Jones இருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவார்கள். கைதிகள் மறுவாழ்வு தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவர்கள் இருவரும் உஸ்மான் கானால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

METROPOLITAN POLICE

AFP

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்