லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: கொல்லப்பட்ட இளம்பெண்ணின் நெகிழச் செய்யும் ட்விட்டர் செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் பிரிட்ஜில் தீவிரவாதி உஸ்மான் கான் நடத்திய தாக்குதலில் குத்திக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான Saskia Jones (23), ட்விட்டரில் வெளியிட்ட மனதை தொடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளியன்று தீவிரவாதியான உஸ்மான் கான் என்னும் தீவிரவாதி லண்டன் பிரிட்ஜில் நடத்திய தாக்குதலில் Saskia Jones மற்றும் Jack Merritt (25) என்னும் இருவர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் Saskia வெளியிட்டுள்ள நெஞ்சை நெகிழச் செய்யும் ட்விட்டர் செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

அதில் Saskia, நான் இறந்த பிறகு யாராவது ஒருவர், எங்கேயோ ஓரிடத்தில், என்னைக் குறித்து எண்ணும்போது, இவளை நான் நேசித்திருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டதுபோலவே, கைதிகள் மறுவாழ்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றின்போது அநியாயமாக கொல்லப்பட்ட Saskiaவைக் குறித்து பலரும் நிச்சயம் எண்ணியிருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Saskiaவின் குடும்பத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி ஒன்றில், குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், அதனால் அது தொடர்பான திட்டம் ஒன்றில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்