பிரித்தானிய ஆற்றில் கேட்பாரற்று கிடந்த 80,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஸ்காட்டிஷ் ஆற்றங்கரையில் பிரித்தானியாவை சேர்ந்த புதையல் வேட்டையாளருக்கு 80,000 பவுண்ட் மதிப்புள்ள தங்கக்கட்டி கிடைத்துள்ளது.

ஒரு புதையல் வேட்டைக்காரர் பிரித்தானியாவின் மிகப்பெரிய தங்க கட்டியை கண்டுபிடித்துள்ளார். இது 80,000 பவுண்டுகள் மதிப்புடையது என்று கருதப்படுகிறது.

121.3 கிராம் எடையுள்ள 22 காரட் தங்கம், பெயரிடப்படாத ஒரு ஆராய்ச்சியாளரால் ஸ்காட்டிஷ் ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது முதலில் இரண்டு துண்டுகளாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றாக பொருந்தினாலும், நடுவில் சிறிய துளை இருப்பதால், "மீண்டும் இணைந்த தங்கம்" என அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'Gold Occurrences In The UK' என்கிற புத்தகத்தை எழுதிய லீ பால்மர் தனது புத்தகத்தின் ஆராய்ச்சிக்காக, புதையல் உரிமையாளரை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த தங்கத்தை பார்த்த போது டோனட் வடிவத்தில் இருந்தது. அதில் அசுத்தங்கள் எதுவும் இல்லை. சுமார் 22 காரட் தூய தங்கம். உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு இது.

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பயன்படுத்தப்படாத தங்கக் கட்டி இது என கூறியுள்ளார்.

மேலும், அந்த தங்கக்கட்டியினை ஸ்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் அல்லது இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் வாங்குவார்கள் என்று தான் நம்புவதாகவும், சட்டப்படி பார்த்தால் 'தி கிரவுன் எஸ்டேட்டில்' அதை ஒப்படைக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்