பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: தொடர்ந்து முன்னேறும் போரிஸ் ஜான்சன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடந்த சில நாட்களாக லேபர் கட்சி முன்னேறுவதைப் போன்ற ஒரு தோற்றம் பிரித்தானிய அரசியலில் உலவி வந்த நிலையில், போரிஸ் ஜான்சன்தான் முன்னேறுகிறார் என சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு இன்னமும் 9 நாட்களே இருக்கும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன், லேபர் கட்சியின் ஜெரமி கார்பினை விட, 12 புள்ளிகள் முன்னிலை வகிப்பதாக அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

Kantar என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ள அந்த ஆய்வில், கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டதை விட ஒரு சதவிகிதம் அதிகரித்து, கன்சர்வேட்டிவ் கட்சி 44 சதவிகித வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியினர் முன்னேறி வரும் நிலையில், லேபர் கட்சியினரோ முன் சொல்லப்பட்ட அதே 32 சதவிகித வாக்குகளுடனேயே உள்ளனர்.

SNP மூன்று சதவிகித வாக்குகளும், கிரீன்ஸ் கட்சி மூன்று சதவிகிதமும், Plaid Cymru ஒரு சதவிகிதம் வாக்குகளும் பெறுவர் என்றும் அந்த அமைப்பின் சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்