லண்டனில் தீவிரவாதியுடன் நேருக்கு நேர்... 5 முறை கத்திக் குத்து: மனம் திறக்கும் வெளிநாட்டு இளைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டன் பாலத்தில் தீவிரவாதி உஸ்மானை நேருக்கு நேர் எதிர்கொண்ட போலந்து நாட்டவர் முதன் முறையாக அன்று நடந்தவற்றை நினைவு கூர்ந்துள்ளார்.

லண்டன் பாலத்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட உஸ்மானை நேருக்கு நேர் எதிர்கொண்டவர்களில் ஒருவர் போலந்து நாட்டவரான 38 வயது Lukasz Koczocik.

இவரும் இவருடன் மேலும் இருவரும் இணைந்தே கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட உஸ்மான் என்ற தீவிரவாதியை எதிர்கொண்டுள்ளனர்.

இதில் லூகாஸ் கோக்ஸோசிக் என்பவர் 5 முறை உஸ்மானால் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தென்கிழக்கு லண்டனில் தமது காதலியுடன் குடியிருக்கும் லூகாஸ் சம்பவத்தன்று நடந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழ்மை பகல் Fishmongers Hall-ல் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே ஒருபோதும் கற்பனை செய்ய முடியாத, சோகமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது என்றார்.

லூகாஸ் மட்டுமின்றி பலர் அந்த தீவிரவாதியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். லூகஸின் கண்ணில் அப்போது சடங்குகளுக்காக பயன்படுத்தப்படும் 5 அடி நீளமான ஈட்டி ஒன்று சிக்கியுள்ளது.

அந்த ஈட்டியை பயன்படுத்தி கத்தியுடன் கொலை வெறியில் இருந்த உஸ்மான் கானை லூகாஸ் எதிர்கொண்டுள்ளார்.

இதில் லூகாஸ் 5 முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் பொலிசார் லூகாஸை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தாக்குதல் நடந்த வேளையில் ஒரு உள்ளுணர்வு காரணமாகவே தீவிரவாதியை ஆயுதம் ஏதுமின்றி நேருக்கு நேர் எதிர்கொண்டதாக லூகாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக கூறும் லூகாஸ்,

அன்று நடந்தவற்றை ஒரு கெட்ட கனவாக கருதவே தாம் விரும்புவதாகவும், தமது குடும்பத்தாரின் முழு ஆதரவும் தமக்கு உள்ளது எனவும் லூகாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்