உச்சிமாநாட்டில் டிரம்ப் பற்றி புறணி பேசிய உலகத் தலைவர்கள்... வெளியான வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா
201Shares

பிரித்தானியாவில் நடைபெற்ற நேட்டோ நிகழ்வின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து பிரித்தனியா பிரதமர் உட்பட சில நாட்டு தலைவர்கள் புறணி பேசும் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ, இம்மானுவேல் மக்ரோன் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் நேற்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நேட்டோ வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் பற்றி புறணி பேசியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய நீண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து கலாய்த்து சிரித்து மகிழ்கின்றனர்.

கூட்டணியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற லண்டன் உச்சிமாநாட்டின் போது, பிரான்ஸ் ஜனாதிபதி ஏன் தாமதமாக வந்தார் என்று மூன்று உலகத் தலைவர்கள் விவாதித்து வருவதாகத் தெரிகிறது.

இளவரசி அன்னேயும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது, ஆனால் அவர் எப்படி பதிலளித்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் யாரும் டிரம்ப் பெயரை அதில் குறிப்பிடவில்லை. மாறாக கனடா பிரதமர் ட்ரூடோ, அமெரிக்க அதிபரின் நீண்ட நேர பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி மட்டும் பேசுகிறார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்