பிரித்தானிய பொதுத்தேர்தல் 2019: இங்கிலாந்தின் கண்ணுக்கு தெரியாத பிரிவினைகள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
221Shares

எப்போதுமே அரசியல்வாதிகள் பிரித்தானியாவில் வடக்குக்கும் கிழக்குக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி வந்த நிலையில், தேர்தலையொட்டி அந்த விடயம் மீண்டும் பேசப்படும் முக்கிய விடயமாகியுள்ளது.

ஒரு நாடு உருவாக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவைதான் அந்த நாட்டின் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கின்றன.

அப்படிப்பார்க்கும்போது, பிரித்தானியாவில் இந்த விடயத்தில் வடக்கு தெற்கு என பெரும் பிளவு காணப்படுவதை மறுக்க முடியாது.

காரணம், ஒருவர் உருவாக்கும் பொருளின் அளவைப் பார்க்கும்போது, லண்டனில் ஒருவர் 26,000 பவுண்டுகள் மதிப்புடைய பொருட்கள் மற்றும் சேவையை உருவாக்குகிறார். இது வட மேற்கு, வட கிழக்கு மற்றும் யார்க்‌ஷையர் பகுதியில் உருவாக்கப்படும் பொருட்களை விட, அதிகமாகும்.

அதேபோல், கிராமப்பகுதிகள் மற்றும் நகரப்பகுதிகளில் காணப்படும் வேலைவாய்ப்பு வேறுபாடும் வடக்கு தெற்கு என்று மட்டுமல்ல, பெரிய நகரங்கள், மற்ற ஊர்கள் என்ற அளவிலேயே பெருமளவில் உள்ளது. அடுத்து ஊதிய பாகுபாடுகள்.

அப்படிப்பார்த்தால் லண்டனுக்கும் மற்ற ஊர்களுக்கும் கடும் வேறுபாடு காணப்படுகிறது.

லண்டனில் ஒரு மணி நேரத்திற்கு ஒருவர் சம்பாதிக்கும் தொகை 18 பவுண்டுகள். இது மற்றபகுதிகளை ஒப்பிடும்போது 27 முதல் 48 சதவிகிதம் வரை அதிகமாகும். நாட்டின் சில பகுதிகளில் விலைவாசி குறைவாகவும் சில பகுதிகளில் அதிகமாகவும் உள்ளது.

வாடகையோ நில அடமானமோ, வடக்கில் குறைவாகவும் தெற்கில் அதிகமாகவும் காணப்படுகிறது.

எனவே வடக்கு தெற்கு வித்தியாசங்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. நமது அரசியல்வாதிகளும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அவற்றை தங்கள் பிரச்சாரங்களில் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் மாற்றங்கள்? இந்த தேர்தல் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்